top of page

பொழில் (3)

Updated: Jun 27, 2020


நாள்: 7


ன்றைய தினம் காட்டிற்குள் நடைபயணம் சென்று வந்து தயர்னா கிராமத்திலிருந்து விடைபெற்றோம்.

பொதுவாக மேகாலயாவைச் சுற்றிப்பார்க்க பைக்கில் செல்வது சிறந்ததாக இருக்கும். ஏனென்றால் "சாலைகளின் நிலைமை, மக்கள், மேகங்கள், அதன் நிழல்கள், அவ்வப்போது மழை" என ரசிப்பதற்கு ஏராளம் ! கவுகாத்தியிலிருந்து வாடகைக்கு ராயல் என்பீல்ட் ஹிமாலயன் முதல் டிவிஎஸ் என் டார்க், அப்ரில்லா என தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ளலாம். சாலைகளும் ஏறத்தாழ அனைத்து இடங்களிலும் சமாகவே இருப்பதால் எந்த வாகனத்திலும் செல்லலாம். விண்ணை முட்டும் மலைகள் லே லடாக்-க்கு அழகென்றால் , இங்கு நம்மை உரசிச் செல்லும் மேகங்களும், சிலிர்க்கச்செய்யும் தூறல்களும், அருவிகள் கடல் போல் கொட்டுவதும் அழகே ! ஒரு வாரம் தாராளமாய்ச் சுற்றலாம் இம்மாநிலத்தை !


இரவு பிளாக் பிரிட்ஜ் ரிசார்ட் அடைந்ததும், பசியும் குளிரும் வாட்டியது. சற்று நேரத்தில் எரியூட்டிய நிலக்கரியின் கதகதப்பு எங்களை வெதுவெதுப்பாக்கியது. தங்கும் விடுதி மரத்தினாலான ஈரெடுக்கு வீடு. போர்வைகள் மெத்தைகள் என அனைத்தும் துர்நாற்றம். மோசமானதை மாற்றி இரவு உணவு உண்ணச்சென்றோம். அவ்வாறே தூக்கமும் அழைத்து ! நாள்: 8 மறுநாள் காலை சற்று குளிர் அதிகமாயிருந்தது. அறையை விட்டு வெளியே வந்ததும் தான் தெரிந்தது இவ்விடத்தின் ஒட்டு மொத்த அழகு. பசுமை மேடுகள், சிற்றாறு, பைன் மரங்கள், இவையனைத்தையும் பிரதிபலிக்கும் அழகிய குட்டை என அழகில் ஒரு படி மேலேயிருந்து !


பின்னர் வெந்நீர் வர தாமதமாக, அப்டியே அருகிலிருக்கும் ஆற்றங்கரைக்கு சென்று கால் வைக்கும் போது தான் தெரிந்தது அதன் குளிர் தன்மை.


முழங்காலளவு ஆழமான பகுதியில் சென்று அரைமணிநேரமாக இயற்கைக் குளியலில் ஈடுபட்டோம். பின்னர் தேநீர் அருந்தி கிளம்பினோம் உலகின் புகழ்பெற்ற இடத்திற்கு! மௌசின்ராம் உலகின் அதிகமான மழைபொழிவை பெறும் இடமாகும் (11872 mm). நாமெல்லாம் இதை சிரபுஞ்சி என்று படித்திருக்கின்றோம் பாடப்புத்தகத்தில் ! அந்த சிரபுஞ்சியில், அதிக மழைப்பொழிவைப் பெருமிடம் இதுவாகும்.


இங்கிருந்து 55 கிலோமீட்டர் தொலைவு சென்று அவ்வூரை அடைந்தோம். ஆனால் அந்த இடம் மற்றும் தகவல் பலகையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இங்கிருந்து 55 கிலோமீட்டர் தொலைவு சென்று அவ்வூரை அடைந்தோம். ஆனால் அந்த இடம் மற்றும் தகவல் பலகையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இங்கிருந்து 55 கிலோமீட்டர் தொலைவு சென்று அவ்வூரை அடைந்தோம். ஆனால் அந்த இடம் மற்றும் தகவல் பலகையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.இங்கிருந்து 55 கிலோமீட்டர் தொலைவு சென்று அவ்வூரை அடைந்தோம். ஆனால் அந்த இடம் மற்றும் தகவல் பலகையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

நாங்களும் பலபேரிடம் கேட்டோம் அனைவரும் தெரியவில்லை என்றனர் !. இறுதியாக ஒரு பள்ளி மாணவன், "வ்விடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தருகே உள்ளது" எனக்கூற, 'அப்பாடா! என்று அங்கு சென்றோம். அங்கு சென்றும், எங்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.மீண்டும் பலபேரிடம் சென்று கேட்கும்போது, "தெரியவில்லை" என்றனர். "என்னடா சோதனை, ஒரு போர்டை கண்டுபிடிக்க முடியலையே " என மிளகாய் தின்றது போன்று சுற்றினோம்.


மீண்டும் இணையதள புகைப்படத்தை அதன் பின்னாலிருக்கும் கட்டடங்களையும், இங்கே இருக்கும் அமைப்பையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டே இருந்தோம். அரைமணிக்கும் மேலாக சுற்றிக்கொண்டிருக்கும்போது, அவ்வழியே சென்ற ஒருவர் , இவ்விடம் "பின்னாலிருக்கும் கட்டிடத்திற்க்கருகே உள்ளது" எனக் கூற, ஓடினோம் ஆவலாய் ! அதுபோலவே அங்கு ஒரு மஞ்சள் நிற போர்டில், பச்சை வண்ணத்தில் "புவியின் மிக ஈரமான பகுதி" என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது !

பின்னர் என்ன ? அதனருகே இருந்த மழை அளவீட்டுக் கருவியை உற்றுநோக்கிவிட்டு , புகைப்படம் எடுத்துக் கொன்டோம். அதன்பிறகு இன்று சுற்றிப் பார்ப்பதற்கு எந்தத் திட்டமும் இல்லை. இங்கிருந்து 105 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மௌலினாங் கிராமத்திற்கு செல்வதே இன்றைய இலக்கு ! வழியில் மதிய உணவு உண்டு மேகாலயாவின் மழைகளில் நனைந்து, மலைகளில் சென்று கொண்டிருந்தோம். இரவு நெருங்க நெருங்க மௌலினாங் கிராமத்தை அடைந்தோம். கிராமத்திற்கு செல்லும் சாலை ஏறத்தாழ 20கிலோமீட்டர் மோசமான நிலையிலிருந்து. ஆனால் கிராமத்தில் அனைத்தும், சற்றும் எதிர்பாராத விதமாகவே இருந்தது. ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த தங்கும் விடுதியை அடைந்து களைப்பாறினோம். பிறகு "அடுத்தநாள் ஞாயிறு என்பதால் இன்றே தேவையானதை வாங்கிக்கொள்ள வேண்டும்" எனத் தகவல் வர , அருகிலிருக்கும் கைவினைப்பொருட்கள் கடையில் பிடித்ததை வாங்கிக்கொண்டோம்.


விலை சற்று அதிகம் இருப்பினும், வாங்கிக்கொண்டோம் அதில் கலைநயமிருப்பதால் ! இரவு உணவு அருகிலிருக்கும் உணவு விடுதியில் உண்டு கிராமத்தில் நடை பயணம் சென்று தூங்கச்சென்றோம்! நாள்: 9


இன்று இந்த கிராமத்தை சுற்றிப் பார்த்துவிட்டு, துவாக்கி நதி, நோகலிகை அருவி பார்த்துவிட்டு சில்லோங் செல்வது திட்டம். அதிகாலை எழுத்து கிளம்பி கேமராவோடு மீண்டும் கிராமத்தினுள் செல்ல, எங்கும் பூந்தோட்டமாய்க் காட்சியளித்தது.


ஆசியாவில் தூய்மையான கிராமம் என்ற பெயர்பெற்றது இந்த மௌலினாங். குப்பையில்லாத சாலைகள்,ஓங்கி உயர்ந்த மரங்கள், பூந்தோட்ட வேலிகள், ஆங்காங்கே மூங்கிலாலான குப்பை தொட்டிகள், கான்கிரீட் சாலைகள், மூங்கில் தட்டியிலான சிறுசிறு வீடுகள், அதனூடே நிறைய தங்கும் விடுதிகள், ஆங்கிலம் பேசும் மக்கள், மகிழ்வுடன் சுற்றித்திரியும் சிறார்கள், ஒரு ஆரம்பப்பள்ளி, விளையாட்டு மைதானம், அமைதியான சூழல், கிராமத்திற்க்கேற்ற ஒரு தேவாலயம் !




மேற்க்கூறியவை எல்லா ஊரிலும் தான் இருக்குமே என்கிறீர்களா? ஆம் ! "இருக்கும், ஆனால் இல்லை " என்பது போல் சில வேறுபாடுகள் உண்டு, அவ்வேறுபாடே இவர்களை உயர்த்தியுள்ளது. உதாரணமாக சாலையில் குப்பை போடக்கூடாது, தவறி அது கிடந்தால் உடனே அம்மக்கள் அதை குப்பை தொட்டியில் எடுத்து போடுகின்றனர். மேலும் கிராமம் முழுவதும் செடி கொடி மலர்கள் என வீட்டுக்கு வீடு அவ்வளவு பராமரிப்பு. இன்னும் சொல்லிக்கொண்டே செல்லலாம் ! பிறகு நண்பர்கள் அனைவரும் "பங்களாதேஷ் வியூ பாயிண்ட்" பார்க்கக் கிளம்பினோம்.

பெரிய மரத்தில் மூங்கில் குச்சிகளால், சாய்வாக பாதையமைத்து, உச்சிக்குச் செல்லுமாறு அமைத்திருந்தனர். அங்கிருந்து நாம் பங்களாதேஷ் நாட்டைப் பார்க்கலாம். மொத்தத்தில் ஒரு சினிமாவில் வரும் கற்பனைக் கிராமத்தை நேரில் சென்று பார்வையிட்டுத் தங்கி வந்தது போல் அனுபவமிருந்தது. அதுவே இதன் சிறப்பு ! பராமரிப்பு செலவை இம்மக்களே பார்த்துக்கொள்கின்றனர், அரசின் உதவியை நாடுவதில்லை ! இங்கு சென்று வந்த பிறகு, நமது கிராமங்களையும் இவ்வாறு மாற்றியமைக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் வரும்!

பிறகு காலை உணவை வழியில் உண்டுவிட்டு, சென்றோம் துவாக்கி நதியைப் பார்க்க ! துவாக்கி நதி மேகாலயாவிலிருந்து பங்களாதேஷ்-க்கு செல்கிறது.ஆண்டின் கடைசி மாதங்களில் நீரோட்டம் குறைந்து, கலங்களின்றி கண்ணாடி போல் பிரதிபலிக்கிறது. இதில் படகு போக்குவரத்தும் உண்டு.


ஆனால் நாங்கள் சென்றதோ அக்டோபர் ! வெளிர் பச்சையாக கலங்கள் நீர் சென்றது ..! போற போக்கில் பார்த்துவிட்டு, இந்தியா பங்களாதேஷ் செல்லும் பாதையை பார்க்கக் கிளம்பினோம். இவ்வழியாக சாலைப் போக்குவரத்து நடைபெறுகிறது. அங்கு சென்று சிறுது நேரம் செலவிட்டோம். பெரிதாய் தடுப்பு ஏதுமில்லாததால் அண்ணன் பழனி நடந்தே பங்களாதேஷ் எல்லைக்குள் செல்ல, இந்தியா எல்லை வீரர் ஓடி வந்து இதற்கு மேல் செல்லக்கூடாது என எச்சரிக்க , அப்போதுதான் புரிந்தது எங்களுக்கு அது இரெண்டு நாட்டிற்கும் பொதுவான இடமென்று ! இதுவே பதற்றமான பாகிஸ்தான் அல்லது சீனா எல்லை என்றால், அண்ணன் பழனியின் கதி ?

பிறகு மதியவெயிலில் அங்கிருந்து கிளம்பினோம்; வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் வேறு ! இன்று மௌஸ்மாய் குகை, நோகலிகை அருவி பார்த்துவிட்டுட்டு சில்லாங் சென்று தங்குவது திட்டம். மாலை நான்கு மணியளவில் மௌஸ்மாய் குகை அடைந்தோம். நுழைவுசீட்டு வாங்கிவிட்டு உள்ளே நுழைந்தோம். 150 மீட்டர் நீளமும் சுரங்க பாதைகளில் சுண்ணாம்புக்குழம்பாக மேலிருந்து கீழாக தொங்கிக்கொண்டிருந்தது. சில இடங்களில் குறுகலான பாதைகளில் செல்வது மிகுந்த சிரமாகவும், மூன்றடி தாவிச் செல்லுமாறு இருந்தது.

வயதானவர்களால் இப்பாதைகளில் செல்ல இயலாமலும், வழியும் விடாமலும் இருந்ததால், கூட்ட நெரிசலை உண்டாக்கியது. ஆங்காங்கே குகைகளில் கசிந்த நீர் தேங்கி, வழுக்கும் பாதைகளாய் இருந்தது. 30 நிமிடத்தில் வெளியே வந்து மீண்டும் நோகலிகை அருவி பார்க்கச் சென்றோம் அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ! மாலை அடங்கும் நேரத்தில் இருள் சூழ அருவியை அடைந்தோம். தயர்னா கிராமம் செல்லும்போது இவ்வருவி பார்ப்பதாகத் திட்டம். அன்றைய தினம் இரவு தாமதமாகியதால், இன்று வந்துள்ளோம். இவ்வருவியே சில கிலோமீட்டர் தூரத்தில் ரெயின்போ அருவியாக கொட்டுகிறது.


ஆழமான பள்ளத்தாக்கில் 304 மீட்டர் உயரத்திலிருந்து கொட்டிக்கொண்டிருக்கிறது.

பின்னர் சில்லாங்கில் முன்பதிவு செய்த தங்கும் விடுதியை தொடர்பு கொள்ள முடியவில்லை.


விடுதி உரிமையாளர் சுமன்! முன்பதிவு மட்டுமே வாட்ஸ்ஆப் மூலம் செய்திருந்தோம்.


இடம் எங்களுக்குத் தெரியவில்லை. இவ்விடுதி மற்றொரு விடுதி மேலாளர் சொல்லி முன்பதிவு செய்திருந்ததால் அவர்களைத் தொடர்பு கொண்டோம். அவர்களோ "சுமன் இங்குதான் உள்ளான், நீங்கள் வாருங்கள்" என இடத்தையும் கூற அங்கு சென்றோம். அங்கு சுமன் இருந்து கொண்டு நான் அவன் இல்லை, இங்கு அறைகள் இல்லை எனக்கூறினான். இறுதியாக மூன்று அறைகளுக்கு பதில் ஒரு பெறிய அறை மட்டுமே மூன்று அறைகளின் விலையில் தந்தான் ! இறுதியாக அவனது பொய்யை நாங்கள் உடைக்க ஒரு கணம் விக்கித்து போனான். தொலைந்து செல்லட்டும் என விட்டுவிட்டு வந்தோம் .


பிறகு இணையத்தில் எங்களுக்கு நடந்ததைப் பற்றிக் குறிப்பிட்டும் , குறைந்த மதிப்பீடு செய்தும் பதிவு செய்தோம். இன்று அவ்விடுதி நிரந்தரமாக இணையத்தில் மூடப்பட்டுள்ளதாக தெரிகிறது . இவ்வாறு செய்தால் எத்தனை நாட்கள் தொழில் செய்ய முடியும்? பொதுவாக இதுபோன்று சொதப்பல்கள் ஒவ்வொரு பயணத்திலும் நிகழும் ! நாம்தான் அதற்கு இடம்கொடாமல் கவனமாக இருக்க வேண்டும் ! நாள்: 10 அடுத்த நாள் கிளம்பி "லைட்ழும் பள்ளத்தாக்கிற்கு " சென்றோம். செல்லும் வழியில் காலை உணவிற்கு ஒரு உணவகத்தில் நிறுத்தி, நன்றாக சாப்பிட்டோம். அங்கிருந்த கிட்டார் ஒன்றை அனைவரும் வாசிக்க நேரம் சென்றுகொண்டிருந்தது. உணவகமும் நல்லதொரு அருமையான சூழலில், எழில்மிகு அமைக்கப்பட்டிருந்தது. அதைச்சுற்றிலும் சிறு சிறு பள்ளத்தாக்கு மற்றும் மேடாகக் காட்சியளித்தது.அனைத்தும் காய்கறிகள் அமோகமாக விவசாயம் செய்யப்பட்டிருந்தது.


அப்போது அவ்வழியாகச் சென்ற சிறார்களை புகைப்படமெடுக்க, வெட்கப்பட்டுக்கொண்டு, முகத்தை மறைத்து, வேறொரு வழியில் ஓடிச்சென்றார்கள். அரைமணி நேரத்தில் லைட்ழும் பள்ளத்தாக்கை அடைந்தோம். எங்கும் சமவெளி போல் மேடும் பள்ளமுமாகப் புற்களோடு பசுமையாகக் காட்சியளித்தது. அவ்வாறே கிழக்கு திசையில் செங்குத்தான பள்ளம். இரெண்டு மலைகளுக்கிடையே உள்ள இந்தப் பள்ளம், கீழே பார்க்கத் தலை சுற்றியது, அவ்வளவு ஆழம்! பின்னர் பாறையின் நுனியில் நின்று கொண்டு, மரத்தில் ஏறிக்கொண்டு என விதவிதமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு பள்ளத்தாக்கிலிருந்து மேலே எழும்பும் மேகங்களோடு மேகங்களாக விளையாடி மகிழ்ந்தோம்.




"கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் "படத்தில் இறுதியாக வரும் காட்சி இங்கு எடுத்ததே! அங்கு விற்கப்பட்ட தேநீர் வாங்கியருந்தினோம். என்ன சுவை ! அங்கிருக்கும் எலுமிச்சை நீளமாக இருக்கிறது. அதை பிளிந்து, சுடுநீரில் தேயிலைத்தூள் கலந்து குடிக்கும் சுவை, இன்னும் நாவில் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

தயர்னாவில் காட்டிற்குள் சென்ற நடைபயணம், அடுத்த இரெண்டு நாட்களுக்கு வலிக்காமல் வலித்தது கால்களை ! வாகனத்தில் ஏறமுடியாமலும் , இறங்க முடியாமலும், வாலிபர்களாகிய நாங்கள் வயோதிகர்களாக காட்சியளித்தோம் !

பின்னர் கிளம்பி சில்லாங் வழியாக கவுகாத்தி செல்லத் தயாரானோம். சில்லாங் கடந்ததும், உமியம் ஏரியை கண்டு பிரமித்தோம். கார்மேகம் சூழ்ந்து, மழையைப் பொழிய தயாராய் இருந்தது. இது மின்சார உற்பத்திக்காக செயற்கை முறையில் கட்டப்பட்ட அணையாகும்.


மழைக்கு இதமாக சோளக்கதிர்களை வாங்கிக்கொண்டு மீண்டும் பயணம் தொடர்ந்தது. கிட்டத்தட்ட 11கிலோமீட்டர், அணையின் கரையிலே சாலை அமைந்திருந்தது.


மேகங்களின் ஆலயத்தைச் சற்று கனத்த மனதுடன் கடந்து கொண்டிருந்தோம். மீண்டும் ஒருமுறை வந்துவிட வேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது.


சிலமணி நேரங்களில் அசாம் நகரை அடைந்து, பிரம்மபுத்திரா நதியில் மிதக்கும் கப்பலைப் பார்த்துக்கொண்டு கடைவீதிக்குச் சென்றோம்.

மலிவு விலையில் கிடைத்த கைவினைப்பொருட்களை வாங்கிக்கொண்டு ஓயோ விடுதியை அடைந்தோம்.


நாள்: 11


அடுத்தநாள் காலை எழுந்து விமான நிலையம் சென்று சென்னை நோக்கிய பயணம் ஆரம்பித்தது!


பத்து நாள் சென்றதே தெரியவில்லை!


கீழே மொத்த செலவுகளும், நாங்கள் பார்த்த இடங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

இரெண்டு அருமையான மாநிலங்களைச் சுற்றிப் பார்த்த மகிழ்ச்சியோடு பயணம் முடிந்தது. நீங்களும் சென்று வாருங்கள் "சிக்கிம் மற்றும் மேகாலயா" என்ற மழைக்காடுகளுக்கு ! பொழில் என்ற வார்த்தையின் அர்த்தத்தை உணர்வுபூர்வமாக அறிந்து கொள்ள !


என்றும் அன்புடன் ப. சிவலிங்கம்


108 views0 comments
bottom of page